டெல்லி: 12 ஆண்டுக்கு முன்பு பாலியல் வன்கொடுமையால் தாக்கப்பட்டு பலியான நிர்பயாவுக்காக போராடினோம்; இப்போது, தனது கட்சி பெண் எம்.பியே ஒருவரால் தாக்கப் பட்டுள்ள நிலையில், அந்த குற்றவாளியை பாதுகாக்க போராடுகிறது தாக்குதலுக்கு ஆளான பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் கடுமையாக சாடியுள்ளார்.
கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு சென்ற ஆம்ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால். அங்கு கேஜ்ரிவாலை சந்திக்க முயற்சித்துள்ளார். அதை தடுத்த அவரது உவியாளர் பிபவ் குமார் அவரை கடுமையாக தாக்கியதாகவும், வயிற்றில் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஸ்வாதி மாலிவால் காவல்துறையில் புகார் கொடுத்த நிலையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமாரை கைது செய்து டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கவுரவ் கோயல் முன் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள முதல்வர் கெஜ்ரிவால், ஸ்வாதி மாலிவாலின் குற்றச்சாட்டை மறுத்துள்ளதடன், அக்கட்சி கேஜ்ரிவால் மீது மேலும் ஒரு பொய் வழக்கு பதிவு செய்வதற்காக பாஜகவினர் கூறுவது போல் ஸ்வாதி செயல்படுவதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது. மேலும் நேற்று மாலை, பாஜக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து பேரணி நடத்தியதுடன், முடிந்தால் தங்களை கைது செய்யுங்கள் என கெஜ்ரிவால் அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம்ஆத்மி பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ஆம்ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், , “டெல்லியில் 12 ஆண்டுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த நிர்பயாவுக்கு நீதி கிடைக்க ஆம் ஆத்மி கட்சி சார்பில் வீதிகளில் இறங்கி போராடினோம். ஆனால் இப்போது என்னை தாக்கியவரை (பிபவ் குமாரை) பாதுகாக்க நம் கட்சியினர் வீதியில் இறங்கி போராடுகின்றனர்.
நான் தாக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை அந்த நபர் அழித்துள்ளார். அத்துடன் அவருடைய செல்போனில் இருந்த இது தொடர்பான ஆதாரங்களையும் அழித்துள்ளார்.
சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை திருப்திபடுத்துவதற்காக என் மீது இவ்வளவு சக்தியை பயன்படுத்தி இருப்பார்கள் என்று கருதுகிறேன். சிசோடியா சம்பவ இடத்தில் இருந்திருந்தால் என் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்” என பதிவிட் டுள்ளார்.