சென்னை

சென்னையில் ஈக்காடுதாங்கள் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தோர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது.

சென்னை நகரில் ஈக்காட்டுத்தாங்கலில் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது.  இந்தப் பகுதியில் சாலையோரம் வசிக்கக் கூடிய மக்கள் இந்த ரயில் நிலைய வாசலில் படுத்து உறங்குவது வழக்கமாகும்

அதன்படி நேற்றும் படுத்து உறங்கியபோது அங்கு வந்த மர்மநபர்கள், அவர்கள் மீது ஆசிட் பாட்டிலை வீசி உள்ளனர். ஆசிட் வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 5 க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்துள்ளனர்.

மேலும் அந்த பகுதி முழுவதும் ஆசிட் நெடி வீசி வருவதுடன் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கிண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆசிட் வீச்சு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.