பாட்னா: ”அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.கவால் தொடக்கூட முடியாது” என இறுதிக்கட்ட தேர்தல் பிரசார போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி கூறினார்.
உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி இன்று இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. வரும் 20ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதையொட்டி, அங்கு அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர், ராகுல் காந்தியை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அதிபோல் இக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “ரேபரேலி மக்களுடன் 100 ஆண்டுகளுக்கு மேலான புனிதமான உறவு உள்ளது. தனக்கும், தனது குடும்பத்திற்கும் ஆதரவு கொடுத்து வரும் ரேபரேலி மக்களுக்கு நன்றிகள். நீங்கள் இந்த தேர்தலில் ராகுலுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். அவர் ஒரு போதும் உங்களை ஏமாற்ற மாட்டார்” என கூறினார்.
பின்னர் பேசிய ராகுல் காந்தி, ”அரசியலமைப்பு சட்டம் இல்லாமல் இந்தியா வாழ முடியாது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவது ஒருபுறம் இருக்கம், அதை பா.ஜ.கவால் தொடக்கூட முடியாது. ஜூன் 4 ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். அதன்பிறகு ஜூலை 4 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.8500 வழங்கும் பணி தொடங்கும். இது அவர்களை வறுமையில் இருந்து மீள உதவு செய்யும்” என தெரிவித்துள்ளார்.