சென்னை: சென்ட்ரல் – விமான நிலையம் மெட்ரோ புளு லைன் சேவை சீரானது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பயணிகள் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக வும் தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் – விமான நிலையத்துக்கு இடையே செல்லும் புளுலைன் ரயில் சேவை,  தொழில்நுட்பக் கோளாறால்   இன்று காலை முதல் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த வழியில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இன்று முழுவதும் அந்த லைனில் ரயில் சேவை இருக்காது என்றும், தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. . தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை வழியாக விமான நிலையத்துக்கு இயக்கப்படும் நேரடி ரயில் சேவை இன்று நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனால், காலை முதல் பச்சை வழித்தடத்தில் விமான நிலையத்துக்கு பயணம் மேற்கொண்ட பயணிகள் ஆலந்தூரில் இறங்கி நீல நிற வழித்தடத்தில் விமான நிலையம் சென்ற ரயிலுக்கு மாற வேண்டிய சூழல் நிலவியது.  இதனால் அந்த லைனில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு சீரடைந்ததால் மீண்டும் சென்னை சென்ட்ரல் – விமான நிலைய நேரடி மெட்ரோ நிலையங்கள் இயங்கத் தொடங்கியதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.