சென்னை: ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட், ஸ்டேடியம் அமைந்துள்ள சேப்பாக்கத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 24பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. அவர்களிடம் இருந்து விற்பனையாக டிக்கெட் மற்றும் ரூ.65,700 பணத்தை பறிமுதல் செய்தனர்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய ஸ்டேடியங்களில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டியின் 61வது ஆட்டம் நேற்று மாலலை 3.30 மணி அளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மேக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டி சென்னைக்கும் ராஜஸ்தானுக்கும் இடையே நடைபெற்றது. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது.
முன்னதாக, ஐபிஎல் போட்டிகளை காண, டிக்கெட் விநியோகம் ஆன்லை மற்றும் கவுண்டர்கள் மூலமும் விற்பனை செய்யப்பட்டது. சாமானிய மக்களுக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பலத்த போட்டிகளுக்கு இடையே டிக்கெட்டை பலர் பெற்றனர். ஆனால், டிக்கெட்டுக்களை வாங்க புரோகர்கள் பலர் முன்னதாகவே டிக்கெட் கவுண்டர்களில் வந்து நின்று மொத்தமாக டிக்கெட்டுக்களை பெற்று, பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், நேற்று சென்னை சேப்பாக்கம் பகுதிகளில், கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 24 பேரை கைது செய்துள்ளது. செ கைது செய்யப்பட்ட 10 பேரிடம் விற்றுபோக மீதமுள்ள 27 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, ரூ.65,700 பணத்தை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 17வது ஐபிஎல் தொடர் நேற்று (மே 12ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மாலை நேரப் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் சேன்ட்னருக்கு பதிலாக தீக்ஷனா சேர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் இருந்தே அபாரமாக பந்து வீசிய சென்னை அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களை ரன் சேர்க்க விடாமல் துல்லியமாக பந்து வீசினர்.
ஃபார்ம் அவுட்டில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் இந்த ஆட்டத்திலும் 24 ரன்களுக்கு வெளியேறி சொதப்பினார். அவரைத் தொடர்ந்து பட்லர் 21(25), சஞ்சு சாம்சன் 15(19) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பத்திலேயே தடுமாற்றத்தில் இருந்தது. அந்த அணியின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனான ரியான் பராக் இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். இவருடைய அதிரடி ஆட்டத்தின் விளைவாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் முதல் இன்னிங்ஸின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்திருந்தனர்.
பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ருத்துராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ஆரம்பத்தில் இருந்தே பொறுப்புடன் ஆடி ரன்களை நிதானமாக சேர்த்து வந்தனர். அஸ்வினின் பந்தில் ரச்சின் ரவீந்திரா 27(18) ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் கேப்டன் ருத்துராஜுடன் மிச்சல் ஜோடி சேர்ந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தார். அடுத்தடுத்து மிச்சல் 22(13), மொயின் அலி 10(13), சிவம் துபே 18(11), ரவீந்திர ஜடேஜா 5(7) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய கேப்டன் ருத்துராஜ் 41 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், 18.2 ஓவர்களில் 145 ரன்கள் அடித்து வெற்றிப் பெற்ற சென்னை அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. இத்துடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாக உருமாறியுள்ளது. அதேசமயம் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனான ரியான் பராக் இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். இவருடைய அதிரடி ஆட்டத்தின் விளைவாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் முதல் இன்னிங்ஸின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்திருந்தனர்.