சென்னை: சவுக்கு சங்கர் விவகாரத்தில் அவரை பேட்டி எடுத்த ரெட்பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ்  தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள  நிலையில், அவரை கடந்த 48மணிநேரமாக காணவில்லை,  “எனது கணவரை மீட்டு தாருங்கள்”  ரெட்பிக்ஸ் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி  குற்றம் சாட்டி உள்ளார்.  எனது கணவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து எனக்கு எந்த விவரங்களையும் போலீசார் வழங்க மறுப்பதாக கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு கூறுபவர்களை காவல்துறையினரைக் கொண்டு கைது செய்து மிரட்டி வருகிறது ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இதற்கிடையில் சவுக்கு மீடியா உரிமையாளரான சவுக்கு சங்கர் தனது யூடியூப் பக்கத்தில் திமுக அரசின் முறைகேடுகளையும், முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினரின் அரசியல் தலையீடுகளையும் அடிக்கடி வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். சவுக்கு சங்கரின் வீடியோ மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில், சவுக்கு சங்கர் சமீபத்தில் பேட்டி அளத்த ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில்,  தமிழக காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களின் நடவடிக்கை குறித்தும் பேசிய தகவல்கள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,  பெண் போலீசார் புகாரின் பேரில், சவுக்கு சங்கர் மீது  கோவை சைபர் கிரைம் காவல்துறை வழக்கு பதிவு செய்து, தேனில் இருந்த சவுக்கு சங்கரை நள்ளிரவில் கைது செய்து,  சிறையில் அடைத்துள்ளது. அவர்மீது கஞ்சா வழக்கு உள்பட 7 வழக்குகள் அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்டதுடன், குண்டர் சட்டத்திலும் காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த நிலையில்,  சவுக்கு சங்கர் வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது, சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த  ரெட் பிக்ஸ் யூடியூப் உரிமையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்ததை அடுத்து 10 ஆம்தேதி இரவு டெல்லியில் திருச்சி தனிப்படை காவல்துறையினர் டெல்லியில் வைத்து பெலிக்சை  கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பெலிக்ஸ் கைது செய்யப்பட்ட 2 நாட்களை கடந்தும்,  அவர் எங்கு இருக்கிறார்? என்ற தகவல் அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது

 

 இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  இரவு, அவரது மனைவி ஜேன் ஆஸ்டின் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அங்கு காவல்துறையினர் இல்லாததால் சுமார் 45 நிமிடம் காத்திருந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜேன் ஆஸ்டின் பெலிக்ஸ் “எனது கணவரை கைது செய்த பின்னர், இதுவரை அவர் எங்கே இருக்கிறார்? என்ற தகவலும் இல்லை. இது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தால், இங்கு புகார் பெற்றுக் கொள்ள காவல்துறை அதிகாரிகள் இல்லை.

எனது கணவரை கைது செய்த திருச்சியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவர் என்னிடம், ‘அவரை கைது செய்துள்ளோம். விரைவில் திருச்சிக்கு கொண்டு வரப்படும்’ எனத் தெரிவித்தார். அதன் பிறகு, எந்தவித தகவலும் இதுவரை எனக்கு வழங்கப்படவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, எனது கணவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து எனக்கு எந்த விவரங்களையும் காவல்துறையினர் வழங்க மறுக்கின்றனர்.

இது தொடர்பாக, சென்னை டிஜிபி அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. திருச்சி காவல்துறையினர் கண்டிப்பாக எனக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்.

கைது செய்வதில் தவறில்லை; ஆனால், 48 மணி நேரம் மேல் கடந்தும் இதுவரை நீதிமன்றத்தில் ஏன் ஆஜர்படுத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினார். மேலும் இது குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ஆட்கொணர்வு மனு’ தாக்கல் உள்ளோம்’ எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையில் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள பெலிக்ஸ் சென்னை அழைத்து வரப்பட்டு உள்ளதாகவும், சென்னையில் இருந்து திருச்சி அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் கைது செய்யப்பட்டால் யூடியூபர் பெலிக்ஸ் சென்னைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் இதனை அடுத்து திருச்சி அழைத்து செல்லப்பட்டு அங்கு விசாரணை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்ட பெலிக்ஸ்,  டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது இதனை அடுத்து சென்னையில் இருந்து வேன் மூலம் அவர் திருச்சி அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் திருச்சியில் போலீசார் அவரிடம் விசாரணை செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது