பாட்னா: காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் நிலையில், அங்கு அவருக்கு வாக்கு சேகரித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேர்தல் பிரசாரத்தின்போது மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால்,  இருட்டில் மைக் இல்லாமல்  கிராம மக்களின் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் கார்மீது ஏறி நின்று பிரசாரம் மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

18வது மக்களவைக்கான  தேர்தல்  நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம்  19ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், இறுதியாக ஜூன் 1ந்தேதி 7வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஏற்கனவே 3 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில்,  நான்காம் கட்ட வாக்குப்பதிவு  ஏப்ரல் 13ந்தேதி நடைபெற உள்ளது.  அதன்படி,   ஆந்திராவின் 25 தொகுதிகளிலும், தெலங்கானாவின் 17 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக  நடைபெறுகிறது. மேலும், உத்தர பிரதேசத்தின் 13 தொகுதிகள், மகாராஷ்டிராவின் 11 தொகுதிகள், மேற்கு வங்கத்தின் 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தின் 8 தொகுதிகள், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் தலா 5 தொகுதிகள், ஒடிசாவின் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரின் 1 தொகுதி என மொத்தம் 10 மாநிலங்களின் 96 தொகுதிகளில் மே 13ஆம் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கிடையில்,  உ.பி. மாநலிம் ரேபரேலி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் போட்டிடுகிறார். ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் வரும் மே 20ஆம் தேதி அதாவது ஐந்தாவது கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  ராகுல் ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடும் நிலையில், 2வது தொகுதியாக ரேபரேலி தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார். இதையொட்டி, அங்கு கடுமையான தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் தொடர்ந்து பரப்புரை பணியில ஈடுபட்டுள்ளனர்.

ராகுல் காந்தியை வெற்றி பெற வைக்க  அவரின் சகோதரி பிரியங்கா காந்தி தொடர்ந்து கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் தொடர்ந்து இரவு பகல் பாராமல் தெருமுனை கூட்டங்களிலும் பங்கேற்று உரையாற்றி வருகிறார்.  அந்த வகையில் எ  ரேபரேலி மக்களவை தொகுதிக்குட்பட்ட பச்ராவன் சட்டமன்ற தொகுதியில்  சம்பவத்தன்று இரவு தேர்தல்  பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த இடத்தில் எவ்வித வெளிச்சமும் இல்லை, பேசுவதற்கு மைக்கும் இல்லாத நிலையில், மொபைல் டார்ச் வெளிச்சத்தில் பிரச்சார வாகனத்தின் மீது ஏறி நின்று உரத்த குரலில் பிரியங்கா காந்தி  பிரசாரம் மேற்கொண்டார்.  அந்த பகுதி இருட்டாக  காணப்பட்ட   நிலையில், மக்கள் தங்கள் கையில் உள்ள டார்ச் லைட்டை அடித்து பிரியங்காவின் பேச்சை கேட்டனர்.

அப்போது பேசிய பிரியங்கா, “இந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர்களாகிய நீங்கள் எப்போதும் அரசியல் தளத்தில் நாட்டிற்கே வழிகாட்டியுள்ளீர்கள். கொள்கைகள் எப்போது தவறாகிறதோ அப்போது அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுகிறீர்கள். இந்த நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியையே நீங்கள் தோற்கடித்தவர்கள். அதேபோல் எதிரிகளையும் வீழ்த்தியுள்ளீர்கள். இதுதான் உங்களின் வழக்கம். இந்திரா காந்தியும் உங்களிடம் இருந்துதான் தனது பாடத்தை கற்றுக்கொண்டார். நீங்கள் அவரை தோற்கடித்த போது அவர் கோபமடையவில்லை. இந்த காலத்தில் பல அரசியல்வாதிகள் செய்வதுபோல் உங்களுக்கு அவர் எந்த தீங்கும் செய்யவில்லை என்றவர்,  ,”இன்று இருக்கும் பிரதமர் மிகப்பெரிய கோழை. அவரிடம் யாராவது கேள்வி கேட்டால் கைது செய்துவிடுவார். அவரை நாடாளுமன்றத்தில் இருந்தே தூக்கியெறிவோம். இன்று விவசாயி வறுமையில் சிக்கித் தவிக்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு பொருளும் விலை உயர்ந்துள்ளது” என்றார்.