சென்னை: மதுரவாயல் பகுதியில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிலும், சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் ‘சவுக்கு மீடியா’அலுவலகத்திலும் தேனி போலீசார் சோதனை செய்தனர். பிறகு கஞ்சா, செல்போன்,டேப், 2லட்சம் பணம், உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். மேலும் 7வது வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர். சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனைக்கு பிறகு குடும்ப அடையாள அட்டை, மொபைல் போன், ரொக்க பணம் 2 லட்சம், கம்ப்யூட்டர், கஞ்சாவுடன் கூடிய சிகரெட் வெப் கேமரா, கார், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது பின்னர் போலீசாரின் சோதனையில் எடுத்த பொருட்கள் சரிவர கணக்கு பார்த்து மதுரவாயல் தாசில்தார் சந்திரசேகர் என்பவர் முன்னிலையில் சவுக்கு சங்கர் வீட்டுக்கு காவல்துறை அதிகாரிகள் சீல் வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது வீட்டில் கஞ்சா சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் வீடு சீல் வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.