சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கியூட் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘கியூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்தியஅரசு கடந்த 2022ம் ஆண்டு முதல், கியூட் தேர்வு எனப்படும் நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி மத்திய கல்வி அமைச்சகம் (MoE), இந்திய அரசு (GOI) சமூகங்கள் பதிவுச் சட்டத்தின் (1860) கீழ் திறமையான, வெளிப்படையான பயனர்களை தேர்வு செய்வதற்காக என்டிஏ மூலம் தேர்வுகளை மேற்கொண்டு வருகிறது.,
மத்தியஅரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் திறனை சோதிக்கும் வகையில் கியூட் நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மத்திய பல்கலைக்கழகங்களில், இளநிலை, மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான கியூட் நுழைவுத் தேர்வை (CUET) அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு நடத்தும் பணியை தேசிய தேர்வு முகமை (NTA) மேற்கொண்டு வருகிறது. ஒற்றைச் சாளர முறையில் பயனர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதன்படி, நடப்பாண்டு, மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான பொது பல்கலைக்கழக நுழைவு எழுத்துத் தோ்வு (கியூட் -யுஜி) நாடு முழுவதும் 380 நகரங்களிலும் வெளிநாடுகளில் 26 இடங்களிலும் வரும் 15 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை(என்டிஏ) அறிவித்தது.
இந்த நுழைவுத் தோ்வானது, வெவ்வேறு பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, கணினி அடிப்படையில் மற்றும் நேரடி எழுத்துத் தோ்வு நடைமுறைகளிலும் நடத்தப்படுகிறது.
நிகழாண்டுக்கான க்யூட்-யுஜி எழுத்துத் தோ்வு வரும் 15 முதல் 18-ஆம் தேதிவரை நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுவதும் 380 நகரங்களிலும் வெளிநாடுகளில் 26 இடங்களிலும் தோ்வு நடைபெறுகிறது. தோ்வு மைய விவரங்கள் தேசிய தோ்வு முகமை வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கணினிவழித் தோ்வு வரும் 21, 22, 24-ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அதற்கான விவரங்கள் பின்னா் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.