சென்னை: பிரதமர் மோடி மதக்கலவரத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மதக் கலவரத்தை தூண்டும் வகையில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக செல்வப் பெருந்தகை தாக்கல் செய்த மனுவில், தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி மத வெறுப்புகளைத் தூண்டும் வகையில் பேசி வருகிறார். மத கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசும் பிரதமர் மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட வேண்முடும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனுவில் பிரதமர் மோடியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் வழக்கை பட்டியலிட உயர்நீதிமன்ற பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த செல்வபெருந்தகை சார்பில், வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கலைமதி அமர்வில் முறையிடப்பட்டது. இதையடுத்து, மனுவில் உள்ள குறைகளை சரி செய்து புதிய மனுத் தாக்கல் செய்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.