சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே வேலூர் வழியாக ரயில் போக்குவரத்து நேற்று மாலை முதல் மீண்டும் துவங்கியது.
வேலூர் – திருவண்ணாமலை இடையே அகலப்பாதையாக மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள கடந்த 2008ம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
2018ம் ஆண்டு பணிகள் முழுமையாக நிறைவடைந்த போதும் கடந்த 7 ஆண்டுகளாக வேலூர் – திருவண்ணாமலை இடையே ரயில் சேவை துவக்கப்படாமல் இருந்தது.
இந்த ரயில் சேவை நேற்று முதல் துவங்கப்பட்டது, சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் வேலூர் மார்க்கமாக இரவு 12 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைந்தது.
மறுமார்கமாக அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில் காலை 9:50க்கு சென்னை கடற்கரை வந்து சேர்கிறது. 50 ரூபாய் கட்டணத்தில் இயக்கப்படும் இந்த ரயில் சேவைக்கு பக்தர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.
17 ஆண்டுகள் கழித்து சென்னை – திருவண்ணாமலை இடையே நேற்று ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியதை அடுத்து ரயில் பயணிகள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
19 வருட போராட்டமா?
2008 இல் மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல பாதையாக மாற்றுவதற்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
2018 இல் திட்டம் முடிவடைந்த பின்னும், 7 வருஷமா ரயில் விடாமல் இருந்தது பாஜக அரசு
ஒருவேளை தமிழக ரயில் சேவையில் கிடப்பில் போட்ட பாஜக அரசை எதிர்த்து RSS போராடி இருக்குமோ? pic.twitter.com/X5cm6zlxQ3
— Satheesh Kumar (@saysatheesh) May 3, 2024
மேலும், சென்னை கடற்கரை முதல் மேல்மருவத்தூர் வரை செல்லும் மின்தொடர் வண்டியை விழுப்புரம் வரை நீட்டித்தும், திண்டிவனம் முதல் நகரி வரையிலான புதிய ரயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ளவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.