நாடியா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மோடி அரசு தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இல்லாத நாட்டை விரும்புவதாக கூறி உள்ளார்.

 

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தி மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மாநிலத்தில் தீவிரப்படுத்தி உள்ளார். தனது பிரசாரங்களில் அவர் மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக சாடி வருகிறார்  நேற்று நாடியா மாவட்டத்தின் டெகட்டாவில் கட்சியின் முன்னாள் எம்.பி. மஹூவா மொய்த்ராவை ஆதரித்து பிரசாரம் அவ்ர் மேற்கொண்டார்.

மம்தா தனது பிரசாரக் கூட்டத்தில்,

“பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் அனைத்து பிரிவினருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனப் பொய் கூறி வருகிறார். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் இருப்பை ஆபத்தில் ஆழ்த்தி விடும்.  இவர்களின் உரிமைகளில் பொது சிவில் சட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மோடி அரசு தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இல்லாத நாட்டைதான் விரும்புகிறது.  பொது சிவில் சட்டம்  பழங்குடியினர் உள்பட பல்வேறு பிரிவினர் தங்கள் சடங்கு முறைகளை பின்பற்ற அனுமதிக்காது. பாஜக அரசியல் சாசனத்தை அழிப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

கடந்த 10 ஆண்டுகளாக குடியுரிமை திருத்தச்சட்டம் மூலம் மதுவாக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் குடியுரிமை பெறுவார்கள் என பாஜக பொய்களை பரப்பி வருகிறது. இந்த சட்டம் ஏற்கனவே குடியுரிமை அனுபவித்து வரும் ஒருவரின் குடியுரிமையை பறித்து முகாம்களுக்கு அனுப்பி வைப்பதற்கே கொண்டு வரப்பட்டுள்ளது.

தேர்த்ல் ஆணையம் வாக்குப்பதிவு முடிந்து 4 நாட்களுக்குப்பிறகு வாக்கு சதவீதத்தை அதிகரித்து அறிவித்துள்ளது  மக்கள் பா.ஜனதாவின் இந்த தந்திரம் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும்.  மேற்கு வங்கத்தில் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மக்களை அச்சுறுத்துவது, மிரட்டுவது, அழுத்தம் கொடுப்பது போன்ற மோடி அரசின் நடவடிக்கைகள் செல்லுபடியாகாது”

என்று கூறி உள்ளார்.