2024 நாடாளுமன்ற தேர்தலின் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இவ்விரு கட்டங்களிலும் சேர்த்து சராசரியாக 66.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஏப்ரல் 19ம் தேதி 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீத வாக்குகள் பதிவானது.
ஏப்ரல் 26ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 66.71% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
அதில் பீகார் மாநிலத்தில் 54.35% வாக்குகள் பதிவாகியுள்ளது முதல் கட்டத்தில் 49.26%மும் 2ம் கட்டத்தில் 59.45% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
உ.பி. மாநிலத்தில் முதல் கட்டத்தில் 61.11%மும் 2ம் கட்டத்தில் 55.19% வாக்குகளும் பதிவாகியுள்ளது இரண்டு கட்டங்களிலும் சேர்த்து சராசரியாக 58.15 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளது.
அதேபோல் மத்திய பிரதேசத்தில் இரண்டு கட்டங்களிலும் சேர்த்து 63.17% வாக்குகள் (1ம் கட்டம் 67.75 – 2ம் கட்டம் 58.59) பதிவாகியுள்ளது.
பீகாரில் 9 தொகுதிகளிலும், ம.பி.யில் 12 தொகுதிகளிலும், உ.பி.யில் 16 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.