சென்னையில் ரூ. 215 கோடி மதிப்பீட்டில் புதிதாக ‘யூனிட்டி மால்’ என்ற வணிக வளாகம் கட்டப்பட உள்ளது.

மாநிலத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் கிடைக்கக்கூடிய பொருட்கள், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் மற்ற மாநிலங்களில் கிடைக்கக்கூடிய பொருட்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் விற்பனை செய்ய இந்த ‘யூனிட்டி மால்’ உதவியாக இருக்கும்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த வணிக வளாகம் கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள கைத்தறி வளாகத்தில் அமைய இருக்கும் இந்த புதிய வணிக வளாகத்தில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் சிறந்த தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளது.