விருதுநகர்: தனியாா் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி தவறான பாதைக்கு அழைத்துச்சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியை நிா்மலாதேவி வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

முன்னாள் பேராசிரியர் நிர்மலாதேவி குற்றவாளி என்று ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்துள்ளார். மேலும் இருவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டு உள்ளார். 

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த தனியாா் கல்லூரி பேராசிரியை நிா்மலாதேவி, மதுரை காமராஜா் பல்கலைக்கழக பேராசிரியா் முருகன், ஆய்வு மாணவா் கருப்பசாமி ஆகியோா் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்கள், விசாரணை நிறைவு பெற்ற நிலையில், இந்த வழக்கு தொடா்பாக வருகிற ஏப்ரல்  26-ஆம் தேதி தீா்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டாா். ஆனால், அன்றைய தினம் விசாரணைக்கு நிர்மலாதேவி உள்பட சிலர் ஆஜராக வில்லை. இதையடுத்து தீர்ப்பு 29ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று பேராசிரியை நிா்மலா தேவி வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பேராசிரியர் நிர்மலாதேவி குற்றவாளி என்று ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்துள்ளார்.  இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளை விடுதலை செய்து  தீர்ப்பளித்திருந்தது. அதாவது,. இந்த வழக்கில்,  நிர்மலாதேவிக்கு துணையாக செயல்பட்டதாக  குற்றம்சாட்டப்பட்டிருந்த உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாகத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.