சென்னை: “கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானம் ஊட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன்” என அவரது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், தனது சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பாரதிதாசனுக்கு புகழழரம் சூட்டி உள்ளார். அதில் கூறியிருப்பதவாது,
“தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே”
“பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!”
எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்!” எனத் தெரிவித்துள்ளார்.