டெல்லி

எல் ஐ சி நிறுவனத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் போலியான விளம்பரங்களைப் பதிவிட்டு, மக்களை ஏமாற்றும் வேலை நடைபெறுவதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

எல் ஐ சி என அழைக்கப்படும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பெயர், அதன் இலச்சினை ஆகியவற்றைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, அச்சுஅசலாக ’எல்ஐசி நிறுவன விளம்பரம் போலவே காட்சியளிக்கும் போலியான விள்ம்ப்ரங்கள் சமுக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. 

மேலும் இந்தப் போலியான விளம்பரங்களை நம்பி, ஏராளமான மக்கள் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி எண்கள் மற்றும் இணையதள முகவரியைப் பயன்படுத்தி ஏமாற்றப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

எனவே எல் ஐ சி நிறுவன, மக்களுக்காக வெளியிட்டுள்ள எச்சரிக்கைப் பதிவில்,

“எல் ஐ சி காப்பீடுதாரர்களும் மக்களும் இதுபோன்ற போலியான விளம்பரங்களின் உண்மைத் தன்மையைப் பரிசோதித்துவிட்டு அதன்பின் செயல்படவேண்டும் என எச்சரிக்கிறோம். இந்த விளம்பரங்களில் எல்ஐசி நிறுவன மூத்த அதிகாரிகளின் பெயர்களும் பயன்படுத்தப்படுவதால் மக்கள் யாரும் இவற்றை நம்பி ஏமாற வேண்டாம். இத்தகைய மோசடி நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” 

எனத் தெரிவித்துள்ளது