யநாடு

பாஜக பல கோடி ரூபாய் வரை தேர்தல் பத்திரம் மூலம் வசூல் செய்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார்

கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அவரது சகோதரியும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி நேற்று ல் தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் எடக்காராவில் நடந்த வாகன அணிவகுப்பில் கலந்துகொண்டபோது கட்சியினர், பொதுமக்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார்.

பிறகு வான்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி,

” மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி விடுவார்கள். தினமும் பாஜக எதிர்பாராத பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ராகுல் காந்தி தவறு செய்வது யாராக இருந்தாலும், அவர்களைத் தண்டிப்பதற்கு ராகுல் காந்தி தயங்க மாட்டார். மத்திய அரசு மக்கள் பிரச்சினைகள் குறித்து கவலைப்படவில்லை. 

உணவுப் பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளதைப் பொருட்படுத்தாமல் மக்களின் கவனத்தை பாஜக திசை திருப்பி வருகிறது. பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. உங்களுடைய ஒவ்வொரு வாக்கும் நாட்டை பாதுகாப்பதற்கு உரியது என்ற எண்ணம் வேண்டும். 

பாஜக தேர்தல் பத்திர திட்ட விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டு உள்ளது.  இரு மாநில முதல்வர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.  பாஜக மிக பெரிய ஊழலைச் செய்துவிட்டு, அதனை நியாயப்படுத்தி வருகிறது. 

பாஜக தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் பல கோடி ரூபாயை பா.ஜனதா வசூலித்து உள்ளது. அதாவது பல தனியார் நிறுவனங்களை மிரட்டி, ரூ.100 கோடிக்கு அதிகமான நிதியைத் திரட்டி உள்ளது. இவற்றில் சில நிறுவனங்களுக்கு மூலதனம் கூட ரூ.100 கோடி இல்லாத நிலையில், இந்தத் தொகை எவ்வாறு வந்தது என்று நாம் சிந்திக்க வேண்டும்.  

பாஜகவுக்குத் தேர்தல் பத்திரம் மூலம் பணம் கொடுத்த நிறுவனங்கள், பல வழக்குகளில் இருந்து மத்திய அரசு தப்ப விட்டது.  கடைசியாக உச்சநீதிமன்றம் தலையிட்டு, தேர்தல் பத்திரம் திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்று கூறி ரத்து செய்ததால் நீதி நிலை நாட்டப்பட்டது” 

என்று தெரிவித்துள்ளார்.