மன்மோகன் சிங் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா-வில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி நாட்டின் சொத்துக்கள் வளங்கள் அனைத்தும் சிறுபான்மையினருக்கு வாரிவழங்கப்படும்.
சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை என்று கூறிவரும் காங்கிரஸ் கட்சி யாருக்கு அந்த சொத்தை பிரித்து தருவார்கள் ?
This is from #Banswara, #Rajasthan.
On April 21, Prime Minister #NarendraModi engaged in fear-mongering during an election rally and directly targeted #Muslims.
They (#Congress) will redistribute your wealth among those who have more children and are infiltrators (Muslims),” he… pic.twitter.com/qJiBVza5Lo
— Hate Detector 🔍 (@HateDetectors) April 21, 2024
மன்மோகன் சிங் அரசு முஸ்லீம்களுக்குத் தான் இந்த நாட்டின் சொத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்று ஏற்கனவே கூறியுள்ளது.
அதனால், அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு முஸ்லிம்களுக்கு தான் சொத்துக்கள் அனைத்தும் போய் சேரும் என்று பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடியின் இந்த கண்ணியமற்ற கீழ்த்தரமான பேச்சை அரசியல் கட்சிகள் கண்டித்து வரும் அதேவேளையில் சிறுபான்மையினர் நலன் குறித்து மன்மோகன் சிங் கூறியதை நினைவு கூர்ந்துள்ளனர்.
Not that anyone who wants to deliberately peddle misinformation fueling communal divisions cares much for facts, but in case anyone is even remotely interested in facts, here's what Dr Manmohan Singh actually said.
Misinformation was peddled even then, even now. https://t.co/6m9yT4aw0c pic.twitter.com/gAAHCeSYgr
— Anusha Ravi Sood (@anusharavi10) April 21, 2024
“இந்தியப் பொருளாதாரத்தின் மிகச் சிறந்த செயல்திறன் மற்றும் பொருளாதாரம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் வகையில் அனைத்துப் பிரிவினருக்கும் புதிய வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க நலிவடைந்த மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் நலனில் சிறப்பு கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
சமூகத்தின் சிறந்த பிரிவினர் இந்த செயல்முறையால் பயனடைவார்கள் என்றாலும், “இந்தியா பிரகாசிக்க வேண்டும், அனைவரும் பிரகாசிக்க வேண்டும்” என்ற நோக்கத்துடன் விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளம், சுகாதாரம், கல்வி, கிராமப்புற உள்கட்டமைப்பில் முக்கியமான முதலீடு மற்றும் பொது உள்கட்டமைப்பின் அத்தியாவசிய பொது முதலீட்டுத் தேவைகள், SC/STக்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்துவதற்கான திட்டங்களுடன். , சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று மன்மோகன் சிங் அப்போது கூறியிருந்தார்.
மன்மோகன் சிங்-கின் இந்த பேச்சை திரித்து கடந்த 10 ஆண்டுகளில் தனது ஆட்சியில் மேற்கொண்ட சாதனைகளை கூறாமல் மூன்றாம் தரத்துக்கும் கீழான அரசியல்வாதியாக மக்களிடையே பிரிவினையை தூண்டும் விதமாக பேசிவரும் பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.