சென்னை

ன்று ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையில் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இன்று ரம்ஜான் பண்டிகையையொட்டி அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே இன்று மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால் சென்னையில் இன்று ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது காலை 8 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது.