டலூர்

பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்தை தொடர்ந்து தற்போது குடுகுடுப்பைக் காரரிடம் ஆசி பெற்றுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராகப் போட்டியிடுகிறார். எனவே அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கடலூர் ஒன்றியம் தென்னம்பாக்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட தங்கர்பச்சான், அங்குள்ள ஒரு கிளி ஜோசியரிடம் ஜோசியம் பார்த்தார்.

கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று இருப்பதாக ஜோசியக்காரர் தெரிவித்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. தங்கர்பச்சானுக்கு ஜோசியம் பார்த்த கிளி ஜோசியரை வனத்துறையினர் கைது செய்து  வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்து விடுதலை செய்தனர்.

நேற்று தங்கர்பச்சான் இன்று பண்ருட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு ஒரு குடுகுடுப்பைக்காரரைச் சந்தித்தார். குடுகுடுப்பைக்காரர் தங்கர் பச்சானுக்கு நல்ல காலம் பிறக்க உள்ளதால் அவர் ஜெயிக்கப் போகிறார் என்று தெரிவித்தார். தக்கர் பச்சான் குடுகுடுப்பைக்காரருக்குச் சால்வை போர்த்தி ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.