கடலுர்: தமிழ்நாடு அரசு,  ரூ.100 கோடி செலவில், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய பெருவெளியில்  சர்வதேச மையம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள்,  கட்டுமான பணிக்கு தோண்டப்பட்ட  பள்ளத்தில் இறங்கி   போராட்டம் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடியவர் வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள். இவரது நினைவிடம், அதாவது  அவர் ஜோதி வடிவான  தெய்வ நிலையம் கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூசம் ஜோதி தரிசனம் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் கண்டு  அவரது ஆசி பெற்று செல்வது வழக்கும்.

இதுதொடர்பாக  2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி டலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபை முன் 70 ஏக்கர் பரப்பில் இட உள்ளது. அங்கு சுமார் ரூ.100 கோடி செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து, தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, அடிக்கல் நாட்டப்பட்டு  சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  வள்ளலார் தெய்வநிலைய பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு  சன்மார்க்க நண்பர்கள் மட்டுமின்றி, அந்த பகுதி பொதுமக்கள்  மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில்,  பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி தமிழ் வேங்கை என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், சன்மார்க்கத்தினர் மற்றும் அந்த பகுதி பொதுமக்களின்   எதிர்ப்புகளை மீறி, தமிழக அரசு  வள்ளலார் சர்வதேச மையம் கட்டுவதற்கான கட்டுமான பணியை தொடங்கியுள்ளது.  வள்ளலார்  ஞானசபை அருகே கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. இதனால், அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே அங்கு குவிந்து, கட்டுமானப் பணிக்காக  தோண்டப்பட்ட பள்ளத்தில்  அருகே உள்ள பார்வதிபுரம் கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தம் என கூறப்படுகிறது.

வள்ளலார் சர்வதேச மையத்தை வேறு இடத்தில் அமையுங்கள்! ராமதாஸ் வலியுறுத்தல்