கோழிக்கோடு: வயநாடு தொகுதியில், கம்யூனிஸ்டு வேட்பாளர் அன்னி ராஜாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை களமிறக்குவது பொருத்தமற்றது என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெல்வது என்ற கூட்டணியின் பிரகடன இலக்கை தோற்கடிக்கும் செயல் என்று இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம் செய்துள்ளார்.
பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட 28 கட்சிகள் இணைந்திருந்தாலும், மாநில அளவிலான போட்டிகள் வரும்போது, ஒருவருக்கொருவர் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். ஏற்கனவே மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இடங்கள் ஒதுக்க முடியாது என மம்தா பானர்ஜி கூறியதுடன், பஞ்சாபிலும் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்க ஆம்ஆத்மி கட்சி மறுத்து விட்டது. அதுபோல கேரளாவிலும் காங்கிரஸ் கம்யூனிஸ்டு கட்சிகளிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் மொத்தமுள்ள 20 லோக்சபா தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்., போட்டியிடுகிறது. இவர்களுக்கு எதிராக முக்கியமாக இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றன. வயநாடு தொகுதியில், ஏற்கனவே இந்திய கம்யூ., சார்பில் அதன் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். இது இண்டியா கூட்டணியில் நெருடலை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக ராகுல்காந்தி மீண்டும் அங்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், கோபமடைந்த கேரள மாநில கம்யூனிஸ்டு முதல்வர் பினராயி விஜயன், வயநாட்டில் எங்கள் அணியின் வேட்பாளரார் அன்னி ராஜாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை களமிறக்குவது பொருத்தமற்றது என்று விமர்சித்து உள்ளார், காங்கிரஸ் கட்சியின் இந்த செயல், பா.ஜ.,வை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை சிதைக்கும் நடவடிக்கை என்றவர்,. கேரளாவில் முக்கிய அரசியல் சக்தியாக விளங்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போராடுவதற்காக வந்துள்ளார்.
இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், இடதுசாரி தலைவர் ஆனிராஜாவுக்கும் எதிராக ராகுல் போட்டியிடுவது என்ன நியாயம்.
அவர் வயநாட்டில் பா.ஜ.,வை எதிர்த்து போட்டியிடவில்லை. எங்களுக்கு எதிராகவே போட்டியிடுகிறார். காங்.,தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் மத்திய அரசு வேட்டையாடி வருகிறது. கலால் கொள்கை தொடர்பாக டில்லி அரசுக்கு எதிராக காங்., புகார் அளித்தது. இந்த நடவடிக்கையின் இறுதியில் தான் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
“என்.டி.ஏ.வுக்கு எதிராக இங்கு போட்டியிட வந்ததாக ராகுல் காந்தி கூற முடியுமா? முக்கிய அரசியல் சக்தியான எல்.டி.எஃப்-ஐ எதிர்த்துப் போராடவே இங்கு வந்துள்ளார். இந்தியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் எல்.டி.எஃப்-க்கு எதிராகப் போட்டியிடுவது என்ன நியாயம். அதுவும் எதிர்த்துப் போட்டியிடுவது என்ன நியாயம்? தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரி தலைவர் அன்னி ராஜா? என்றவர், இந்த விஷயத்தில் ராகுல் “இரட்டை நிலை” எடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டிய முதல்வர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரை முழுவதும் CAA குறித்து ஏன் அமைதியாக இருந்தார் என்று கேள்வி எழுப்பினார். குடியுரிமை திருத்த சட்டம் கொள்கைகளால் இந்தியாவின் மதசார்பின்மையை மத்திய பா.ஜ., அரசு அழித்து வருகிறது. ராகுல் இந்தியா முழுவதும் பயணம் செய்தார். ஆனால் சி.ஏ.ஏ.,வுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று விமர்சித்ததுடன்,
இவ்வாறு காட்டமாக விமர்சித்தார்.
வயநாட்டில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர்மீது 242 கிரிமினல் வழக்குகள்….