வாஷ்ங்டன்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது.

பல உலக நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் போட்டிப்போட்டு வருகின்றன. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்த போட்டியில் இணைந்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் செலுத்தப்பட்டு இவை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 வகை ராக்கெட் ஏவப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத அளவுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel