சென்னை: பாஜக கூட்டணியில் தமாகா 3 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு தொகுதி வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. தாக தெரிவித்தார். பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், பாமகவுக்கு 10 தொகுதிகளும், தமாகாவுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அ.ம.மு.க – 2, இந்திய ஜனநாயக கட்சி – 1, புதிய நீதிக்கட்சி – 1, ஓபிஎஸ்-க்கு 1, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில், பாமக, அமமுக, தமாகா, ஓபிஎஸ் தவிர மற்ற சிறிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
உள்பட சில சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயகக் கட்சி ( ஐஜேகே ) பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. மொத்தம் 23 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜிகே வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள, ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்ததார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
அதன்படி, ஈரோடு தொகுதியில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில், வேணுகோபாலும் போட்டியிடுகின்றனர்.