டில்லி
மத்திய அரசு வெளிநாட்டு நாய்கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது.

நாடெங்கும் மூர்க்கத்தனமான சில வெளிநாட்டு நாய்களால் மனித உயிருக்கு ஆபத்து உண்டாவதாகப் புகார்கள் எழுன்ந்தன எனவே மத்திய அரசு 23 வகையான மூர்க்கமான வெளிநாட்டு நாய்களை வளர்க்கத் தடை விதித்து சு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அனுப்பியுள்ள உத்தரவில்,
“நாளுக்கு நாள் வளர்ப்பு நாய்களின் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
எனவே பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக், ராட்வீலர், மாஸ்டிப், தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய், டோர்ன்ஜாக், சர்ப்லானினாக், ஜப்பானிய தோசா மற்றும் அகிதா, மாஸ்டிப்ஸ், டெரியர்கள், ரோடீசியன் ரிட்ஜ்பேக், ஓநாய் நாய்கள், கனாரியோ, அக்பாஷ் நாய், மாஸ்கோ காவலர் நாய், கேன் கோர்சோ உள்ளிட்ட 23 வகையான மூர்க்கமான நாய்களை விற்பனை செய்வதற்கும், செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்.
ஏற்கனவே செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் இந்த இன நாய்களை மேலும் இனப்பெருக்கம் செய்யாமல் இருக்கக் கருத்தடை செய்ய வேண்டும். இவ்வாறு தடை செய்யப்பட்ட நாய் இனங்களை விற்பனை செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் உரிமம் அல்லது அனுமதி வழங்க வேண்டாம்.”
என்று கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]