சென்னை

க்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அமமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

மக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணி அமைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்த கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்தியக் கல்வி மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு  பா.ம.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன்ரெட்டி ஆகியோர்  சென்னை வந்தனர். அமமுக பொதுச் செயலர் டி டி வி தினமரன் மத்திய அமைச்சர்களை சந்தித்து கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து பேசினார். அப்போது பாஜக-அ.ம.மு.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,

“வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்துக் கலந்து ஆலோசித்தோம். குக்கர் சின்னம் கோரி விண்ணப்பம் செய்துள்ளோம். அந்த சின்னமே கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.  குறிப்பிட்ட சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற எந்த நிபந்தனையும் கூட்டணியில் விதிக்கவில்லை. மீண்டும் மோடி பிரதமர் ஆனால் தமிழ்நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பதால் கூட்டணி அமைத்துள்ளோம். “

என்று தெரிவித்தார்.

பாஜக கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இன்று பாஜக அமைச்சர்கள் பாமக வுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.