சென்னை: தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ரூ.48,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் ரூ.50ஆயிரத்தை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடுத்தர சாமானிய மக்களின் விருப்பதாக இருப்பது தங்கம் ஒன்றே. அதன் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு திடீரென சரவனுக்கு ரூ.800 வரை உயர்ந்த நிலையில், நேற்று சரவனுக்கு ரூ.80 மட்டுமே குறைந்தது. இந்த நிலையில், இன்று (மார்ச். 5) சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.48,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மேலும் உயர்ந்து சவரன் ரூ.50 ஆயிரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச். 5) சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.48,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 85 உயர்ந்து ரூ.6, 015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமிற்கு 10 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.90 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 76,900 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.