மயிலாடுதுறை: மக்களிடையே நேரிடையாக தொடர்பு கொண்டு பேசும் வகையில், ”நீங்கள் நலமா திட்டம்” வரும் 6ந்தேதி தொடங்கி வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டித்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் என அனைத்து அரசு அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தமிழ்நாடு மக்களுக்கு போனில் அழைத்து மக்களின் குறைகள் குறித்து கேட்டறியும் வகையில், நீங்கள் நலமா என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
இந்த திட்டத்தை வரும் 6ஆம் தேதி முதல் அதாவது மார்ச் மாதம் 6ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய ஆட்சியிர் கட்டிடம் உள்பட ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றியபோது முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை அறிவித்தார்.