சென்னை
கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் சிறுசேரி- கிளாம்பாக்கம், பூந்தமல்லி- பரந்தூர், கோயம்பேடு – ஆவடி ஆகிய 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளன.
சென்னைமெட்ரோ ரயில் நிர்வாகம் கோயம்பேடு- ஆவடி மெட்ரோ சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரி உள்ளது.
வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் இந்த 119 கி.மீ. நீளத்திற்கு நடைபெற உள்ள மெட்ரோ ரயில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel