சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், 11, 12ஆம் வகுப்பு பொதுத்‌ தேர்வுகளை எழுதும் தனித்‌ தேர்வர்கள்,‌ தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகளை (ஹால் டிக்கெட்)  வரும் 19ந்தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம்‌ செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 1ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 5ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து மார்ச் 11ஆம் தேதி வேதியியல், கணக்கியல், நிலவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. அதேபோல மார்ச் 15ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள் ஆகிய பாடங்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது) ஆகிய பாடத்தின் பொதுத் தேர்வுகள் மார்ச் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன.

தொடர்ந்து உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளன. மாணவர்களுக்கும் தனித் தேர்வர்களுக்கும் ஒரே தேதியில் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில்,  மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளை எழுதும் தனித்‌ தேர்வர்கள்,‌ தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகளை பிப்ரவரி 19 முதல் இணையதளம்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நடைபெறவுள்ள மார்ச்‌ – 2024, மேல்நிலை முதலாமாண்டு மற்றும்‌ இரண்டாமாண்டுப் பொதுத் தேர்வு எழுத, விண்ணப்பித்த தனித் தேர்வர்கள்‌ (தட்கல்‌ உட்பட) தங்களது தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டுகளை 19.02.2024 அன்று பிற்பகல்‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

* தனித் தேர்வர்கள்‌, www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்குச்‌ செல்லவும்.

* அதில் “HALL TICKET” என்ற வாசகத்தினை க்ளிக் செய்தால்‌ ஒரு பக்கம் தோன்றும்‌.

* அதில்‌ உள்ள “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR- MARCH- 2024 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தை ‘Click’ செய்யவும்.

* அதில் தோன்றும்‌ பக்கத்தில்‌ தங்களது விண்ணப்ப எண்‌ மற்றும் பிறந்த தேதியினைப்‌ பதிவு செய்யவும்.

* மாணவர்கள், அவர்களுடைய தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

ஒரே ஹால் டிக்கெட்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும்‌ இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும்‌ சோத்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும்‌ வழங்கப்படும்‌மார்ச்‌ – 2024, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு / இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்‌”.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.