டெல்லி: பாரதிய ஜனதாவின் முன்னாள் தேசிய தலைவரும், மூத்த தலைவரும், அயோத்தி ராமர்கோவில் கட்ட அடித்தளமிட்டவருமான எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருதை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தியில், திரு அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என்றும், “அவருடன் பழகுவதற்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எண்ணற்ற வாய்ப்புகளைப் பெற்றதை நான் எப்போதும் எனது பாக்கியமாகக் கருதுவேன்,” என்றுநெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் சிறந்த விருதாக பாரத ரத்னா விருது கவுரவிக்கப்படுகிறது. நாட்டிற்காக மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டிப் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு(2013) மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும், இவ்விருதைப் பெரும் வகையில் நவம்பர், 2011-இல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லி: பாரதிய ஜனதாவின் முன்னாள் தேசிய தலைவரும், மூத்த தலைவருருமான லால் கிஷன் அத்வானி (எல்.கே.அத்வானி) க்கு பாரத ரத்னா விருதை மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
திரு அத்வானி, அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் துணைப் பிரதமராகவும், பல அமைச்சகங்களுக்குத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1970 முதல் 2019 வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.
அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவருடன் பேசினேன், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தேன்” என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் சமுக வலைதளத்தில் தெரிவித்தார்.
“அடிமட்டத்தில் பணியாற்றியதில் இருந்து நமது துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்வது வரையிலான வாழ்க்கை அவருடையது. அவர் நமது உள்துறை அமைச்சராகவும், I&B அமைச்சராகவும் தன்னை வேறுபடுத்திக் கொண்டார். அவருடைய நாடாளுமன்றத் தலையீடுகள் எப்பொழுதும் முன்னுதாரணமானது, வளமான நுண்ணறிவுகள் நிறைந்தது” என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அரசியல் நெறிமுறைகளில் “ஒரு முன்மாதிரியான தரத்தை” நிலைநிறுத்தியவர் என்றும், “பொது வாழ்வில் அத்வானி ஜியின் பல தசாப்த கால சேவையானது, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் குறிக்கப்பட்டுள்ளது, அரசியல் நெறிமுறைகளில் ஒரு முன்மாதிரியான தரத்தை அமைக்கிறது. தேசிய ஒற்றுமை மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை மேம்படுத்துவதற்கு அவர் இணையற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.
திரு அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என்றும், “அவருடன் பழகுவதற்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எண்ணற்ற வாய்ப்புகளைப் பெற்றதை நான் எப்போதும் எனது பாக்கியமாகக் கருதுவேன்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.