america

ஐக்கிய நாடுகளின் ஆய்வின் படி, ஒவ்வொரு ஆண்டும் 2.9 டிரில்லியன் பவுண்டுகள் உணவு குப்பையில் கொட்டப்படுகிறது. ஒரு ஒப்பீடிற்குப் பார்த்தால், அது 120.8 மில்லியன் யானைகளின் எடைக்குச் சமமானது, 36.2 மில்லியன் 18 சக்கர டிரக்கிற்கு சமமானது, 7.2 மில்லியன் திமிங்கலங்களின் எடைக்குச் சமமானது என்று கூறுகின்றனர்.
உணவு ஆர்வலர் ட்ரைஸ்திரம் ஸ்டுவர்ட் கூறுகையில், குப்பையில் செல்லும் உணவு, தயாரிக்கும் உணவில் மூன்றில் ஒரு பங்கு என தெரிவித்தார். விநியோக சங்கிலியில் ஒவ்வொரு கட்டத்திலும் உணவு குப்பையில் கொட்டப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. பல நேரங்களில், கெட்டுப் போகாத உணவே குப்பைக்கு அதிகமாக செல்கிறது என்றும் தெரிவித்தார்.
பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா, ஒரு வருடத்திற்கு ஒருவர் 640 பவுண்டுகள் வேர்கள் மற்றும் கிழங்குகள் போன்ற உணவு வகைகளைக் குப்பையில் கொட்டுகின்றனர்.
இரண்டாவது இடத்தில் ஐரோப்பியா, ஒரு வருடத்திற்கு ஒருவர் 610 பவுண்டுகள் வேர்கள் மற்றும் கிழங்குகள் போன்ற உணவு வகைகளைக் குப்பையில் கொட்டுகின்றனர்.
மூன்றாவது இடத்தில் கிழக்கு ஆசியா, ஒரு வருடத்திற்கு ஒருவர் 530 பவுண்டுகள் வேர்கள் மற்றும் கிழங்குகள் போன்ற உணவு வகைகளைக் குப்பையில் கொட்டுகின்றனர்.
ஐந்தாவது மற்றும் ஏழாவது இடங்களில் மேற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா உள்ளது, ஒரு வருடத்திற்கு ஒருவர் 470 மற்றும் 227 பவுண்டுகள் தானியம் போன்ற உணவு வகைகளைக் குப்பையில் கொட்டுகின்றனர்.
இன்றும் இந்தியாவில் பல வீடுகளில் உணவுப் பொருட்களை வீண் செய்யாதீர்கள் என்று சொல்லக் கேட்கலாம்; அதன் விளைவோ என்னவோ தான், தென்கிழக்கு ஆசியா இந்த பட்டியலில் கடைசியாக இருக்கிறது.