திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி இன்று காலை கொடியேறியது. கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 2024ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா 19.01.2024ம் தேதி துவங்கி 28.01.2024ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். திருக்கோயில் பழக்க வழக்கப்படி 25.01.2024 தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இந்த தைப்பூச திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த விழாவின் இறுதி நாளான 28.01.2024 இரவு 11.00 மணிக்கு மேல் கொடியிறக்கம் செய்யப்படும். விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று காலை கோவிலில் கொடியேற்றப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், முதல் நாளான இன்று பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 2024ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா 19.01.2024ம் தேதி துவங்கி 28.01.2024ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இத்திருவிழா தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும். 6வது நாள் வெள்ளி தேர் – வெள்ளி வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் தரிசனம் தருகிறார். 7வது நாள் ஏழாவது நாள் மலையில் இருக்கும் தண்டாயுதபாணி பகவான் தங்க தேரில் வலம் வருவார். தை பூசம் பழனியில் திருவிழாக்களின் திருவிழா வாக கருதப்படுகிறது, மலை ஆடிவாரத்தில் நடக்கும் தை தேர் – ரதோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். பக்தர்கள் முருகப்பெருமானுக்கு பூக்கள், சர்க்கரை, தண்ணீர், இளநீர், பால், புனித நீர் போன்ற பலவகையான காவடிகளை வழங்குகிறார்கள்.
தைப்பூச திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தருவார்கள். இதையொட்டி, பக்தர்கள், மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இதற்காக பக்தர்களுக்கு குடிநீர், தங்கும் இடங்கள், கழிவறைகள், வாகன நிறுத்துமிடங்கள், பேருந்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட முன்னேற்பாடு வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பழனி திருக்கோவில் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
கோயிலுக்கு 3 முதல் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தைப்பூச திருவிழா நடைபெறும் இடம் : அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயில், பழனி
கொடியேற்றம் : 19.01.2024 காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்
திருக்கல்யாணம் : 24.01.2024 இரவு 7.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள்
வெள்ளி ரதம் : 24.01.2024 இரவு 09.00 மணிக்குமேல்
தைப்பூசம் : 25.01.2024 அன்று தைப்பூசம். திருக்கோயில் பழக்க வழக்கப்படி 25.01.2024 தைப்பூச திருவிழா நடைபெறுகிறது.
திருத்தேரோட்டம்: 25.01.2024 அன்று மாலை 04.30 மணிக்குமேல்
தெப்பத்தேர் : 28.01.2024 இரவு 07.00 மணிக்கு மேல்
திருவிழா நிறைவு : 28.01.2024 இரவு 11.00 மணிக்கு மேல் கொடியிறக்கம்.