சென்னை: பொங்கலையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வங்கிகளுக்கு இன்று முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் இதற்கு ஏற்றார் போல் தங்களின் பணத்தேவையை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக, இந்த வாரம் சனி ஞாயிறும் விடுமுறை தினங்கள் என்பதால், தொடர்ந்து 5 நாட்கள் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 13 (மாதத்தின் 2வது சனிக்கிழமை )
ஜனவரி 14 (ஞாயிற்றுக்கிழமை மற்றும் போகி பண்டிகை
ஜனவரி 15 திங்கட்கிழமை – தைப்பொங்கல்
‘ ஜனவரி 16 – செவ்வாய்கிழமை மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம்.
ஜனவரி 17 – காணும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள்.