சென்னை

உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகம்  ரூ.6,64,180 கோடி முதலீடு ஈட்டி உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களாகச் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாடு நிறைவு பெற்றுள்ளது. மாநாடு நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி உள்ளனர்.

மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு ரூ.6,64,180 கோடி முதலீடு வந்துள்ளது.

இந்த மாநாடு குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில்,

”நடந்து முடிந்த உலக முதலீட்டாளர் மாநாடு இந்தியாவில் கவனட்தை பெற்றதோடு, ஏராளமான முத்லீடடை பெற்றுள்ளது.  இந்த மாநாட்டின் மூலம் ரூல்6,64,180 கோடி முதலீடு கிடைத்துள்ளது  இதன் மூலம் 14,54712 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு மற்றும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்க உள்ளது. 

தொழிற்சாலை, முதலீடு, மேம்பாடு மற்றும் வணிகத் துறை ரூ. 3,79,809 கோடி முதலீட்டை ஈட்டி உள்ளது,  மின் உற்பத்தித் துறையில் ரு1,35,157 கோடி,, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித் துறையில் ரூ, 62,239 கோடி, தகவல் தொழில்நுட்பத் துறையில் ரூ, 22,130 கோடி, மற்றும் சிறு,, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் ரூ. 63,379 கோடி முதலீடு கிடைத்துள்ளது” 

எனப் பதிந்துள்ளார்.