சியோல்
ஆஸ்கார் விருது பெற்ற பாரசைட் படத்தில் நடித்த பிரபல நடிகர் லீ சுன் கியூன் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
பிரபல தென் கொரிய நடிகர் லீ சு கியூன் ஆஸ்கார் விருது வென்ற பாரசைட் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஆவார் தற்போது 48 வயதாகும் இவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
நேற்று மத்திய சியோலில் உள்ள ஒரு பூங்காவில் அவர் தனது காருக்குள் இறந்து கிடந்ததாகத் தென் கொரிய அவசரக்கால சேவை அலுவலகம் தெரிவித்துள்ளது. காவல்துறையினர் நடிகர் லீ சுன்-கியூனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் அவரது மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள திரையுலகினர் லீ சுன்-கியூன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் லீ சுன்-கியூன் தற்கொலை குறிப்பு போன்ற ஒரு தகவலை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது குடும்பத்தினர் கூறியதையடுத்து அவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள் என முன்னதாக செய்திகள் வெளியாகின.
எனவே அவர் காருக்குள் சடலமாகக் கிடந்ததால், தற்கொலை செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.