சென்னை: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் நேர மின் கட்டணம் குறைத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மின்கட்டணம் அடுத்தடுத்து கடுமையாக உயர்த்தப்பட்டது. இது பொதுமக்கள், வணி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. மின் கட்ட உயர்வை கண்டித்து சிறுகுறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு மாற்றி அமைத்து அறிவித்தது.
இந்த நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் நேர மின் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மின் பயன்பாட்டை பொறுத்து 15%-லிருந்து 25% வரை பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டை பொறுத்து கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.