சென்னை
கோயம்பேடு காய்கறி சந்தைக்குத் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 12 ஆம் தேதி அதாவது ஞாயிறு அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை தீபாவளியைக் கொண்டாடிவிட்டு அடுத்த நாளே அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்ல வேண்டி இருந்தது.
இதில் ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான 13ம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகவும் மகிழ்வை அளித்துள்ளது.
அதைப் போல் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்குத் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை என கோயம்பேடு சிறு மொத்த காய்கறி சங்கம் அறிவித்துள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமை முதல் கோயம்பேடு காய்கறி சந்தை வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.