சென்னை
தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது பிற மாநிலங்களின் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இது குறித்து பலரும் புகார்களை தெரிவித்தனர். இதையொட்டி தமிழக அரசு போக்குவரத்துத் துறை ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் பிற மாநிலங்களில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறு பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மறுபதிவு செய்ய டிசம்பர்16 ஆம் தேதி வரை அவகாசம் தர ஆம்னி முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர்16 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் ஆம்னி பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
[youtube-feed feed=1]