சென்னை: கோவை மிருககாட்சி சாலையில் உள்ள விலங்குகள், பறவைகளை மற்ற மிருககாட்சி சாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அங்கிருந்த பறவைகள், ஊர்வன, பாம்புகள் போன்றவை, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா, சேலத்தில் உள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா மற்றும் வேலூரில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்கா ஆகியவற்றுக்கு இப்போது மாற்றப்படுகிறது.
கோவை, வ.உ.சி. பூங்காவில் உள்ள மிருககாட்சி சாலையின் உரிமம் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரத்து செய்தது. சரியான உள்கட்டமைப்பு வசதி மற்றும் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் உரிமம் ரத்து செய்யப்படுவதாக, மத்திய மிருகக் காட்சி சாலை ஆணையம் (Central Zoo Authority) அறிவித்துள்ளது. இதையடுத்து, அங்கிருந்த மிருகங்கள், பறவைகளை மற்ற வனவிலங்கு சரணாலாயங் களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் என்றும் அறிவுறுத்தி இருந்தது.
கோவை வஉசி மின மிருக காட்சி சாலையானது, 4.5 ஏக்கர் பரப்பளவிலான இந்த மிருகக்காட்சி சாலை, 1965ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு உள்ளது. 487 பறவை இனங்கள், 62 ஊர்வனக்கள், 86 பாலூட்டிகள் உள்ளிட்டவைகள் இங்கு உள்ளன. இந்த மிருகக்காட்சி சாலையை, கால்நடைத்துறை அலுவலரும், மிருகக்காட்சி சாலை இயக்குனர் நிர்வகித்து வருகிறார். இந்த மிருகக்காட்சி சாலையில், மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி, மயில்கள், அலெக்சாண்டரின் கிளி, சிவப்பு மார்பக கிளி, ரோஜா வளையம் கொண்ட கிளி, நைட் ஹெரான், ஆப்பிரிக்க லவ்பேர்ட்ஸ், பிளாக் கைட், கிரேட் ஒயிட் பெலிக்கன் பறவைகள், புறாக்கள், சாம்பல் நிற பெலிக்கன் பறவைகள், வாத்துகள், ஈமுக்கள் உள்ளிட்டவைகள் இங்கு உள்ளன.
இந்த விலங்குகளை, வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயரியல் பூங்கா, சேலம் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா மற்றும் சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இடம் மாற்ற வனத்துறை திட்டமிட்டு உள்ளது. கோவை வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் எம். செந்தில்குமார் தலைமையிலான வன அலுவலர்கள் குழு, வ.உ.சி. பூங்கா மிருகக்காட்சி சாலைக்கு சென்று, அங்கு உள்ள விலங்குகள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.
அதன்படி, அங்கு 487 பறவைகள், 62 ஊர்வன, 8 நாகப்பாம்புகள், 8 எலி பாம்புகள், ஐந்து ரசல்ஸ் விரியன்கள், 11 மலைப்பாம்புகள் மற்றும் 86 உள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்கா, சேலத்தில் உள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா மற்றும் வேலூரில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்கா ஆகியவற்றுக்கு இப்போது மாற்றப்படுகிறது.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 1996ஆம் ஆண்டு விதிகளின்படி, இங்கு உள்ள விதிமீறல்களை சரி செய்ய கோவை மாநகராட்சி மறுப்பு தெரிவித்த நிலையில், இந்த மிருகக்காட்சி சாலையின் உரிமத்தை, கடந்த 2018ஆம் நவம்பர் மாதமே மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், ரத்து செய்து இருந்தது. இந்த ஆணையம், தற்போது இங்கு உள்ள விலங்குகளை, மாநிலத்தின் மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு இடமாற்றம் செய்ய முடிவெடுத்து உள்ளது.