ல்வகுர்த்தி

பி ஆர் எஸ் கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

பாரத் ராஷ்டிர சமிதி (பி ஆர் எஸ்) என்பது முதலில் தெலுங்கான ராஷ்டிர சமிதி என அழைக்கப்பட்டது.  இக்கட்சி தெலுங்கானா மாநிலத்தில் பிரதான கட்சியாக உள்ளது.  இக்கட்சி கடந்த 2001 ஆம் வருடம் கே சந்திரசேகர் ராவ் அவர்களால் நிறுவப்பட்டதாகும்.  இந்த கட்சி ஐதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் பாரத் ராஷ்டிர சமிதி தலைவர்கள் ஸ்ரீ காசிரெட்டி நாராயண ரெட்டி, மற்றும் ஸ்ரீ தாகூர் பாலாஜி சிங்  ஆகியோர் கல்வகுர்த்தி சட்டப்பேரவை தொகுதியை சேர்ந்த  100 பேர் மற்றும் முன்னாள் பிரதிநிதிகளுடன்

காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

 

கடந்த திங்கள் கிழமை அன்று பாஜகவைச் சேர்ந்த பல தலைவர்கள் காங்கிரசில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.