டெல்லி: தீபாவளிக்கு 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருப்பதையும், டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்து 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், பட்டாசு தயாரிப்பாளர்கள், பேரியத்தைப் பயன்படுத்தி பட்டாசுகளை தயாரித்து பயன்படுத்தக் கோரிய மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், “தற்போதைக்கு” பச்சை பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அனுமதி இல்லை என்று கூறியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்த டெல்லி அரசின் முடிவில் தலையிட மறுத்துவிட்டது.
தீபாவளி பண்டிகையில் உலகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் மக்கள் சுவாசிக்கவே கஷ்டப்படும் வகையில் காற்று மாசு உள்ளது. இதன் காரணமாக, தலைநகர் டெல்லியில் பட்டாசு விதிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், நாடு முழுவதும் 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ள உச்சநீதிமன்றம், ‘சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மனோஜ் திவாரி ஒரு மனு தாக்கல் செய்தார். அதுபோல தமிழ்நலாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் பேரியம் கலந்த பட்டாசு தயாரிக்க அனுமதி கோரப்பட்டது. தமிழ்நாடு பட்டாசு மற்றும் அமோர்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம், பச்சை பட்டாசுகளுக்கு மேம்படுத்தப்பட்ட வடிவத்தை பயன்படுத்த நீதிமன்றத்தின் அனுமதியை கோரியது.
இந்நிலையில், பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் மனு தாக்கல் செய்திருந்தார். பட்டாசில் வேதிப் பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடலுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திரந்தார். மேலும், அர்ஜுன் கோபோல் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.
அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்தது. அப்போது, பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் எனவும் அவற்றை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
பின்னர், தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்களை கொண்டு போலியான பசுமை பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமங்களையும் ரத்து செய்யக் கோரி அர்ஜுன் கோபால் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையில், பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாட்டை தளர்த்தவும், பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்ய விரைந்து ஒப்புதல் வழங்கக் கோரியும் தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்க சங்கம் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த விசாரணைகளின்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடி, அரசு முன்மொழிவில் பேரியம் தடை செய்யப்பட்டது சரிதான் என்றும், ஆனால் அது 2018 தீபாவளிக்கு தான் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
டெல்லியில் பச்சை பட்டாசாக இருந்தாலும் மற்ற பட்டாசாக இருந்தாலும் அனைத்தும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் டெல்லி காவல்துறை பட்டாசுகளுக்கு நிரந்தர உரிமம் எதுவும் வழங்கவில்லை என்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடி நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் அனைத்து நிரந்தர பட்டாசு உற்பத்தி உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், உரிமம் பெற்றவர்களின் அனைத்து வளாகங்களையும் போலீசார் ஆய்வு செய்வார்கள் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், தீபாவளி பண்டிகையின்போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையின்போது, காற்று மாசு பரவுவதை குறைக்கும் வகையில், காலை 2மணி நேரமும், மாலை 2மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக்கூடாது: உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு மனு