அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமரன் குன்று,கோயமுத்தூர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குமரன் குன்று என்னும் ஊரில் அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து சுமார் 32 கி.மீ தொலைவில் குமரன் குன்று உள்ளது. குமரன் குன்றில் இருந்து இத்திருக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
சனிதோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இவரை 48 முறை வலம் வந்து வேண்டினால், சனியின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம். கருவறையில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையோடு கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார். இவர் கல்யாண சுப்பிரமணியர் என்பதால் இக்கோயிலில் வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும்.
இக்கோயிலின் பின்பகுதியில் வைத்தீஸ்வரர், தையல்நாயகி சன்னதி விமானங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முன்புறம் ம கா கணபதி, நவகிரகம், வீரபாகு, அருணகிரிநாதர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தின் இடதுபுறம் அரசமர விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.
இத்தலத்தில் புலிப்பாணி சித்தர் புலியின் மீது அமர்ந்த நிலையில் உள்ளார். கோயில் வளாகத்தின் வடபகுதியில் வில்வம், வேம்பு, அரசு, காட்டுமல்லி மற்றும் காரை ஆகிய ஐந்து விருட்சங்கள் ஒரே இடத்தில் வளர்ந்துள்ளன.
அதன் கீழே பஞ்சதரு விநாயகர், ஈசன், நாகர், சக்தி ஆகியோர் ஒரே இடத்தில் காட்சியளிப்பது சிறப்பு. இவர்களை ஒரு சேர வேண்டினால் நினைத்த காரியம் கைகூடும்.
திருவிழாக்கள்
முருகனுக்கு கந்தசஷ்டி, விசாகம், கிருத்திகை போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. பங்குனி உத்திர விழாவும், தைப்பூசத் திருவிழாவும் இத்தலத்தின் முக்கியப் பெருவிழாக்கள் ஆகும்.
பிரார்த்தனைகள்
உடல் நோய், மனநோய் உள்ளவர்கள் நோய் நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்கள்
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.