ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெறும் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், மீன்பிடி தடை காலம் நிவாரணம் ரூ.8000 ஆக உயர்த்தப்படும் என்றும், மீனவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும் , தேவையான இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும் உள்பட 10 அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டார்.
மீன்பிடி தொழிலில் 5 வது பெரிய மாநிலம் தமிழ்நாடு என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , 1076 கி.மீ. நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு என்றும் பெருமிதப்பட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இதற்காக ஆகஸ்ட் 16ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற அவர், அன்று மாலை மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்ட பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். இரவு மதுரையில் தங்கினார்.
பின்னர் நேற்று (17ந்தேதி) காலை கார் மூலம் இராமநாதபுரம் சென்றார். இராமநாதபுரம் செல்லும் வழியில் சிலைமான் கிராமத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போகும் வழியில் பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். ஒவ்வொரு ஊரிலும் முதலமைச்சருக்கு பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.
ராமநாதபுரம் சென்ற முதலமைச்சருக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தென்மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள், நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து நேற்று மாலை இராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ஸ்டாலின் அங்கு இரவு தங்கினார்.
இதையடுத்து, இன்று (18ந்தேதி) காலை, ராமேஸ்வரம் பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து மண்டபத்தில் நடக்கும் மீனவர்கள் நல மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர், மாநாட்டு அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மீன்கள் காட்சி கூடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5,035 பேருக்கு வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். 45,000 பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்கப்படும். விசைப்படகுகளுக்கு 18,000 லிட்டர் மானிய டீசல், நாட்டுப்படகுகளுக்கு 4,000 லிட்டர் மானிய டீசல் வழங்கப்படும் என்று சாத்தியம் உள்ள இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும் என்று கூறினார்.
மீன்பிடி தொழிலில் 5வது பெரிய மாநிலம் தமிழ்நாடு என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , 1076 கி.மீ. நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு என்று தெரிவித்துள்ளார். வகை வகையாக கடலில் கலம் செலுத்தியவர்கள் தமிழர்கள் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் சென்னைக்கு வரும்போதெல்லாம் இந்த பிரச்சனை குறித்து கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கை அதிபர் இந்தியா வந்தபோதும் கச்சத்தீவை மீட்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால் தமிழ்நாட்டுக்குத்தான் முதல் ஆபத்து என்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர் முரசொலி மாறன் என்று கூறியவர், கச்சத்தீவை மீட்க கோரி செவி சாய்க்காததால் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் முரசொலி மாறன் என்று முதல்வர் ஸ்டாலின் நினைவுபடுத்தினார்.
பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில், தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது என்று பிரதமருக்கு முதல்வர் கேள்வி எழுப்பிதடுனு, குடுநுது 9 ஆண்டுகளில் 619 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். பிரதமர் மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் மீனவர்கள் மீதான இலங்கை படை தாக்குதல் தொடர்கிறது.
இந்த ஆண்டில் மட்டும் 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 83 படகுகள் பரிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை படை தொடர்ந்து தாக்குவதை மீனவர்கள் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது என்றும், 2014-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மீனவர்கள் மீதான அடக்குமுறை இன்னும் அதிகமாகி உள்ளது. தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டு
மீனவர்களை இலங்கை படையினர் தாக்குவது வலைகளை அறுத்து எறிவது தொடர்கதையாகியுள்ளது என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டை உலகத்தோடு இணைத்தது கடல்; கடல் ஆழமானது மட்டுமல்ல, வளமானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெற்று வரும் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர்,
மீன்பிடி தொழிலில் 5-வது பெரிய மாநிலம் தமிழ்நாடு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1076 கி.மீ. நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு. வகை வகையாக கடலில் கலம் செலுத்தியவர்கள் தமிழர்கள். தமிழ்நாட்டை உலகத்தோடு இணைத்தது கடல்; கடல் ஆழமானது மட்டுமல்ல, வளமானது என்றார்.
மீனவர் நலனுக்காக திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். மீன்வளத்துறை பெயரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையாக மாற்றினோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மீன்வள பல்கலை.யில் மீனவர் குடும்ப மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 5-ல் இருந்து 20 விழுக்காடாக உயர்த்தி உள்ளோம். கடல் அரிப்பை தடுக்க, படகுகளை பாதுகாக்க தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 2.07 லட்சம் மீனவர்களுக்கு ரூ.62 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. ஆண்டுக்கு விசைப்படகுக்கு டீசல் 18,000 லிட்டர், நாட்டுப்படகுகளுக்கு 4,000 லிட்டர் விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 2.07 லட்சம் மீனவர்களுக்கு மாநில அரசின் பங்களிப்பாக 62.19 கோடி வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் பேசினார்.
குடிமைப்பணி தேர்வுக்காக மீனவ சமுதாய மாணவர்களுக்கு 6 மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி திட்டத்தில் 41 மீனவ சமுதாய மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் வருகையையொட்டி, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.