அஜர்பைஜான்: உலகக்கோப்பை செஸ் போட்டியில் கலந்துகொண்டு, அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

செஸ் உலகக் கோப்பை 2023 என்பது 206 வீரர்களைக் கொண்ட ஒற்றை-எலிமினேஷன் செஸ் போட்டியாகும், இது அஜர்பைஜானின் பாகுவில்  ஜூலை 30 முதல்  ஆகஸ்டு 24ந்தேதி வரை நடைபெறுகிறது. இது செஸ் உலகக் கோப்பையின் 10வது பதிப்பாகும். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெறுவார்கள்.

இந்த போட்டிகளில் கலந்துகொள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா உள்பட பலர் சென்றுள்ளனர்.   காலிறுதி போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார். இதில் ஏழு டை பிரேக் ஆட்டங்களுக்கு பிறகு பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

இதன் மூலம்  உலகக்கோப்பை வரலாற்றிலேயே அரை இறுதிக்கு முன்னேறிய இரண்டாம் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.

இதையடுத்து பிரக்ஞானந்தா அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் பேபியானோ கருவானாவுடன் மோதுகிறார். அத்துடன் மற்றொரு அரையிறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சன், அஜர் பைஜான் வீரர் அப்சர் நிஜாத் ஆகியோரையும் எதிர்கொள்ள உள்ளார்.

உலக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், உங்கள் வரலாற்று சாதனைக்காக,  வாழ்த்துகள்,  #FIDEWorldCup இன் அரையிறுதியில் இருக்க வேண்டும் மற்றும் #கேண்டிடேட்டுகளுக்கு தகுதி பெறுவதற்கு இன்னும் ஒரு படி தொலைவில் உள்ளது. இந்தப் போட்டி இந்திய சதுரங்கத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியது. நன்றாக விளையாடினாய் என தெரிவித்துள்ளார்.