சென்னை: சுங்கச்சாவடியை தாக்கி சேதப்படுத்தியதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மீது நடைபெற்று வந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்ற கோரி கடந்த 2018ம் ஆண்டு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலானது. ஒரு அரசியல் கட்சியே அராஜகத்தில் ஈடுபட்டது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக,  தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இதற்கிடையில்,  , உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்குதலில் ஈடுபட்டதாக தனது  (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன) மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.  இந்த வழக்கில் திமுக அரசு முறையாக வாதாடாமல், வழக்கை வாபஸ் பெற அனுமதி வழங்கியது. இதை ஏற்று, வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தமிழகஅரசும், நீதிமன்றமும் இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபடுவோர்மீதான வழக்குகளை ரத்து செய்வது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.