சந்திரயான்-3 தவிர 6 விண்கலங்கள் ஏற்கனவே சந்திரனை சுற்றி வருகிறது.
தவிர. சந்திரயான்-3 நிலாவை அடைய இருக்கும் அதேவேளையில் ரஷ்யா அனுப்பியுள்ள லூனா 25யும் போட்டியாக களமிறங்குகிறது.
லூனா விண்கலம் ஆகஸ்ட் 10 ம் தேதி ஏவப்பட்டது இது ஆகஸ்ட் 16 ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்பட உள்ளது.
ஏற்கனவே விக்ரம் லாண்டருடன் தொடர்பை இழந்த சந்திரயான்-2 இதே சுற்றுவட்டப்பாதையில் சந்திரனில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் சுழன்று கொண்டு இருக்கிறது.
2009 ல் ஏவப்பட்ட நாசாவின் எல்.ஆர்.ஓ. சந்திரனில் இருந்து 50 முதல் 200 கி.மீ. உயரத்தில் அதனை சுற்றி வருகிறது, 2011ல் ஏவப்பட்ட ARTEMIS P1 and P2 சந்திரனில் இருந்து 100 கி.மீ உயரத்தில் உள்ளது.
இவை தவிர, நாசாவின் கேப்ஸ்டோன் மற்றும் கொரியாவின் KPLO ஆகிய விண்கலமும் சந்திரனை ஏற்கனவே ஆய்வு செய்து சுற்றி வருகிறது.
47 ஆண்டுகள் கழித்து ரஷ்யா தனது லூனா 25 மூலம் மீண்டும் சந்திரனை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது.
இந்த நிலையில் சந்திரயான் 3 அடுத்த சில நாட்களில் தனது லாண்டரை நிலவில் இறக்கி சோதனை செய்ய உள்ளது. இந்த முயற்சி வெற்றியடைவதைப் பொறுத்தே விண்வெளி ஆய்வில் முக்கிய இடமாக சந்திரன் இடம்பெறுவது உறுதிசெய்யப்படும்.