டில்லி
மீண்டும் ராகுல் காந்திக்கு அரசு பங்களா ஒதுக்கப்படலாம் என்னும் தகவலுக்கு ராகுல் பதில் அளித்துள்ளார்.
மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நிலையில், அவர் எம் பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே 20 ஆண்டுகளாக ராகுல் காந்தி வசித்து வந்த டெல்லி 12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிடப்பட்டது.
ராகுல் காந்தி இதை ஏற்று வீட்டைக் காலி செய்தார்.
உச்சநீதிமன்றம் சமீபத்தில் ராகுல் காந்தியின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து அவரது தகுதிநீக்கம் திரும்பப்பெறப்பட்டது. இதனா; ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர். பதவியை திரும்பப் பெற்றதோடு, நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளிலும் பங்கேற்றார்.
மீண்டும் ராகுல் காந்திக்கு மீண்டும் அரசு பங்களா ஒதுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைச் செயலகத்தில் அசாம் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த ராகுல் காந்தியிடம், அரசு பங்களா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ராகுல் காந்தி, “இந்தியா மொத்தமும் எனது வீடு தான்” என்று இதற்குப் பதில் அளித்துள்ளார்.