டெல்லி: ராகுலுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால், வயநாடு எம்.பி. ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பிழைத்துள்ளது. இதனால், அவர் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிப்பது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா இன்று முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, அவைகளை முடக்கி வருகின்றனர். இதற்கிடையில், ராகுல் காந்தி மோடி சமூக குறித்து பேசியது தொடர்பான வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.  உத்தரவிட்டது. இதையடுத்து, அவரது எம்.பி. பதவி தகுதி நீக்கமானது. இது தொடர்பான மேல்முறையீடு வழக்கில், உச்சநீதிமன்றம், ராஜீவ்காந்தி மீதான 2ஆண்டு கால சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதையடுத்து, அவரை நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து,  ராகுல்காந்தி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ராகுல் பங்கேற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீா்ப்பு வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை சந்தித்து ராகுலுக்கு எம்பி பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா். மேலும் ராகுல் காந்தி எம்.பி. பதவி தொடர்பாக மக்களவை செயலருக்கும் காங்கிரஸ் கடிதம் அனுப்பியது.

இந்த நிலையில்,ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதிநீக்கம் வாபஸ் குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று முடிவெடுப்பார் என காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது. இன்று ராகுலுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கினால், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 8) முதல் தொடங்கும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதத்தில்  பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்  பதிவிட்டுள்ள டிவிட்டில்,  சுப்ரீம் கோர்ட் தண்டனைக்கு தடை விதித்த பிறகு, மக்களவை செயலகம் அறிவிப்பை வெளியிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை (ராஜீவ் உறுப்பினர் பதவியை மீட்டெடுக்க). இன்று சபாநாயகர் தலையிட்டு அது நடக்கும் என நினைக்கிறேன்” என்று ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை மீட்டெடுப்பது குறித்து தெரிவித்துள்ளார்.